தமிழீழத் தேசிய துக்க நாள்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
NEW YORK, USA, May 18, 2024 /EINPresswire.com/ -- தமிழீழத் தேசிய துக்க நாள் மே 18 இன்று தமிழீழத் தேசியத் துக்க நாள். 2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழ தேசத்தை சிங்கள பௌத்த பேரினவாதம் இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமித்துக் கொண்ட கொடூரமான நினைவுகளை தமிழீழ தேசம் உணர்வுபூர்வமாக நினைவுகூரும் நாள். சிங்களத்தின் கோரமான, கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழ் மக்கள் ஆயிரமாயிரமாய், கொத்துக் கொத்தாய்க் கொன்றொழிக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். பொதுமக்கள் சொத்துக்களும்இயற்கையும் பெருமளவில் நாசம் செய்யப்பட்டன. நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் வகையிலானதோர் இனவழிப்பு உலகின் பலமிக்க அரசுகளின் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது. உலக நாடுகளின் நலன்கள் என்ற சமன்பாட்டுக்கமைய இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிய ஒரு சிறிய தேசத்தின் குரல்வளை நசுக்கப்பட்டது. இவ் இனவழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் தொகை 1,40,000 க்கும் அதிகம் என முன்னாள் மன்னார் ஆயர் இராசப்பு ஆண்டகை…