நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அவைத் தலைவராக, திரு. கலையழகன் கார்த்திகேசு அவர்களும், உதவிஅவைத் தலைவராக திருமதி. கௌசலா விஜிதரன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

NEW YORK, NY, UNITED STATES, May 27, 2024 /EINPresswire.com/ — தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசுக்குசவாலாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக, மீண்டும் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின்அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக சர்வதேசஅரங்கில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு அமெரிக்காவின் நியு யோர்க்கில் இடம்பெற்றிருந்தது.

மூன்று நாள் அரசவை அமர்வாக மே 17,18,19 ஆகிய நாட்கள்இடம்பெற்றிருந்தன. நியு யோர்க்கின் பிரதான மைய அரசவைஅமர்வில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவைஉறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்றேலியா,சுவிஸ் ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும்இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர். மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கியஅரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

முதன்நாள் அமர்வில் அரசவைத் தலைவர், உதவி அரசவைத்தலைவர், பிரதமருக்கான தேர்வு இடம்பெற்றிருந்தது.

முன்னராக அங்குரார்ப்பண நிகழ்வில் துருக்கி முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைச்செயற்பாட்டாளருமாகிய திரு.கறோ பயலன் அவர்கள்,ஆர்மேனிய இனப்படுகொலையின் நீதிக்கான போராட்டம்பற்றி சிறப்புரையாற்றியிருந்தார்.

கனடா மொன்றியல் பல்கலைக்கழக பேராசிரியர்திரு.டானியல் ருறிப் அவர்கள் கியூபெக்கின்பொதுவாக்கெடுப்பு அனுபவங்கள் தொடர்பில்சிறப்புரையாற்றியிருந்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது அரசவை அமர்வில், தமிழீழவிடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோசகராகஇருந்துள்ளதோடு, 2009 ஆம் ஆண்டு தமிழின அழிப்புக்குபின்னரான ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல்இறைமைக்குமான போராட்டத்தினை சர்வதேச ஜனநாயகஅரசியல் வெளியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் திரு. உருத்திரகுமாரன் அவர்கள், நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மக்கள்பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அவைத் தலைவராக, முன்னாள் உதவி அவைத் தலைவராகஇருந்த திரு. கலையழகன் கார்த்திகேசு அவர்களும், உதவிஅவைத் தலைவராக திருமதி. கௌசலா விஜிதரன் அவர்களும்ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்தியப் பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில்இந்தியாவில் தேர்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்இவ்வேளை, சிறிலங்காவிலும் அதிபர் தேர்தல்இடம்பெறுவதற்கான அறிவித்தல் வர இருக்கின்ற நிலையில்,இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டில்தமிழீழம் என்ற கொள்கையோடு முன்நகர்ந்து வரும்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பலம்பெற்று வருகின்றமைசிறிலங்கா அரசுக்கு சவாலாகவுள்ளதென அரசியல்அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
X
Instagram

By Courtney